Monday, July 5, 2010


சாப்பாட்டு புராணம்

எனக்கு சாப்பாட்டையும் சமையலையும் அறிமுகம் செய்த என் அம்மாவையும், இவ்வுலகிற்கே சாப்பாட்டை அறிமுகம் செய்த அன்னபூரணி தாயாரையும் வணங்குகிறேன். எண் சாண் உடம்பிற்கு வயிறே ப்ரதானம் என்பார்கள். பசித்தவனுக்கு பழையதும் பஞ்சாமிரதமே. அந்த பழையதையும் பஞ்சாமிர்தமாக ஆக்க நமக்குத் தெரிய வேண்டும். ஆயக் கலைகள் 64. அதில் சமையல் கலையும் ஒன்று. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, தானத்தில் சிறந்தது அன்னதானம், பசி வந்தால் பத்தும் பறக்கும் என்று சாப்பாட்டைப்பற்றி பழமொழிகள் பல உண்டு.


சாப்பாட்டின் முக்கியத்துவம் நமக்குத் தெரிய ஒரு கதை சொல்வார்கள் பெரியவர்கள். ராமாயணத்தில், பரதன் தன் சகோதரன் ராமன் மேல் உயிரையே வைத்திருந்தார். அதனாலேயே ராமன் வனவாசம் முடிந்து நாட்டிற்கு திரும்பும் வரை, ராமர் பாதுகையை அரச சிம்மாசனத்தில் வைத்துவிட்டு, நாட்டு எல்லையிலேயே ராமனுக்காக பரதன் காத்திருந்தார். பரதன் தன் சகோதரனிடம் உன் வனவாசம் முடிந்த கையோடு அயோத்திக்கு வந்துவிட வேண்டும். இல்லையென்றால் நான் தீக்குளித்து உயிரை விடுவேன், என்று கூறியிருந்தார். அவ்வாறே ராமர் வனவாசம் முடிந்து தன் நாட்டிற்கு திரும்பும் வழியில் தனது பக்தரான முனிவர் ஒருவரின் வேண்டுகோளை தட்ட முடியாமல், அவர் வீட்டிற்கு விருந்துண்ண சென்றார். அதற்கு முன் அனுமனை அயோத்திக்கு அனுப்பி பரதனிடம் தான் வந்துகொண்டிருப்பதை அறிவிக்கச் சொன்னார். இதனாலேயே, ராமருக்கு சாப்பாட்டுராமன் என்று பெயர் வந்தது.

இதுபோல் மகாபாரதத்தில், கர்ண மகாராஜா தானங்களில் சிறந்தவராகவும், நன்றியுடமைக்கு உதாரண புருஷராகவும் வாழ்ந்து கொண்டிருந்தார். லோகத்தில் அவர் காலம் முடிந்து அவரது புண்ணிய காரியங்களினால் சொர்கலோகம் சென்றடைந்தார். அங்கு கர்ணனுக்கு ஒரு நாள் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்கவில்லை. அப்போது அவ்வழியே சென்ற ஒரு முனிவரை பார்த்து, தான் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்கவில்லை, ஏன் என்று தெரியவில்லை, எனக்கேட்டார். அதற்கு அந்த முனிவர், உனது ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக்கொள், உன் பசி சரியாகிவிடும் என்று பகர்ந்தார். என்ன ஆச்சர்யம்! கர்ணனின் பசி போய் விட்டது. இது எப்படி என்று கர்ணன் கேட்க, முனிவர் கூறலானார். நீ உன் வாழ்நாளில் எத்தனையோ விதமான தானங்களை செய்துள்ளாய். ஆனால் அன்னதானம் மட்டும் செய்ததில்லை. ஆனால் ஒரு வழிப்போக்கனுக்கு அன்னச்சத்திரதிற்க்கு வழிகாட்டியுள்ளாய். அதன் காரணமாகவே வாயில் விரல் வைத்ததும் உன் பசி அடங்கியது என்று அம்முனிவர் கர்ணனிடம் கூறினார். இதிலிருந்து அன்னதானத்தின் பெருமை நமக்குத் தெரிகிறது.

அதுபோல் நாம் எந்த பொருளையும் வீணாக்குதல் கூடாது. குறிப்பாக சாப்பாட்டை வீணடிக்ககூடாது. எங்கள் ஊரில் (மயிலாடுதுறை) மிச்சமானதை வைத்து செய்யும் சாப்பாட்டிற்கு விட்டேனா பார் என்றே பெயர் வைத்துள்ளார்கள். நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு நம் உடல் நலத்தையும், மன நலத்தையும் காப்போம்.

12 comments:

ராம்ஜி_யாஹூ said...

nice post and nice photo of ANNAPOORANI (but meru is missing)

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராம்ஜி_யாஹூ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

Hi Puvaneswari,

Very nice articl. Thank you.

Best Wishes,
P.Dhangopal

புவனேஸ்வரி ராமநாதன் said...

Mr.P.Dhangopal,
Thanks for your wishes and feedbacks.

R.Gopi said...

//நீ உன் வாழ்நாளில் எத்தனையோ விதமான தானங்களை செய்துள்ளாய். ஆனால் அன்னதானம் மட்டும் செய்ததில்லை. ஆனால் ஒரு வழிப்போக்கனுக்கு அன்னச்சத்திரதிற்க்கு வழிகாட்டியுள்ளாய். அதன் காரணமாகவே வாயில் விரல் வைத்ததும் உன் பசி அடங்கியது//

சூப்பர்.....

இப்போது தான் கேள்விப்படுகிறேன் புவனா....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கோபி.

Unknown said...

நல்ல கருத்து, ஆனால் விட்டேனா பார் பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன் சகோதரி...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி செந்தில்.

Vikis Kitchen said...

Very nice post on Mother Annapoorani and food. You have a wonderful blog dear.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி விக்கி.

Anonymous said...

ரொம்ப நல்ல கருத்து.
அழகா சொல்லி இருக்கீங்க புவனேஸ்வரி..

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாங்க மஹா. ரொம்ப நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails