Friday, May 4, 2012

நவதிருப்பதி திருத்தலங்கள்

தசாவதாரமும் நவகிரகங்களும்:
பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர


என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.


அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்



கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்:
சூரிய ஸ்தலமான இத்திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி: வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார், சோரநாத நாயகி)
தல தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம்: சூரிய ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை):
சந்திர ஸ்தலமான இத்திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்
செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்:
புதன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்:
குரு ஸ்தலமான இத்திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி
மேலும் விவரங்களுக்கு...



தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்:
சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்:
சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
ராகு ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
கேது ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



நவதிருப்பதி ஆலயங்களை, ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம், அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

இதுபோல, நவதிருப்பதி தலங்கள் திருநெல்வேலிக்கு அருகில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல, நமது பெருமைமிகு கோயில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றிலும் நவதிருப்பதி தலங்கள் அமைந்துள்ளன. அவை,

திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் - சூரியன்
நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) - சந்திரன்
நாச்சியார்கோவில் - செவ்வாய்
திருப்புள்ளம் பூதங்குடி - புதன்
திருஆதனூர் - குரு
திருவெள்ளியங்குடி - சுக்கிரன்
ஒப்பிலியப்பன் கோயில் - சனி
கபிஸ்தலம் - ராகு
ஆடுதுறை பெருமாள் கோயில் - கேது

இவை அனைத்தும் ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களாகவும் விளங்குகின்றன. இந்த திருத்தலங்களைப் பற்றியும், அத்திருக்கோயில்களை தரிசனம் செய்து, எழுதவேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய அவா. நிச்சயம் செய்ய முயல்வேன்.

இப்போது நம் அனைவருக்குமே கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம், நமக்குக் கிடைத்துள்ள கோடை விடுமுறை. இந்த விடுமுறை நாட்களில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு நம் பிள்ளைகளை அழைத்துச் செல்வதோடு நின்றுவிடாமல், இது போன்ற பல்வேறு திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம், நம் முன்னோர்களது வாழ்க்கை முறை பற்றியும், அவர்கள் எத்தகைய பெருமை மிகுந்த சிறப்பான வாழ்க்கையை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பதையும், நமது கோயில்களின் கலை நுணுக்கங்களையும், வண்ணக் கலவைகளையும், சிற்ப வேலைப் பாடுகளையும், அவை இத்தனை காலங்கள் ஆகியும் நிமிர்ந்து நிற்பதன் மேன்மையையும், இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற சமதர்ம சன்மார்கத்தையும், அவர்களுக்கு நேரடியாகக் காண்பித்து, நமக்கு எத்தனை பெருமை மிகு பின்னணி உள்ளது என்பதையும், அவற்றை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது போன்ற பொன்னான விஷயங்களை அவர்களது மனதின் ஆழத்தில் விதைக்க வேண்டியது நம் எல்லோரது கடமையாகும். வாழ்க வளர்க நமது திருக்கோயில்களும், அவற்றின் பெருமைகளும்!!

42 comments:

  1. அன்பின் புவனேஸ்வரி ராமநாதன்,

    நவ திருப்பதி ஆலயங்களை ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன், நன்றி. அடுத்தமுறை அவசியம் ஆண்டவன் அருளால் முயற்சிகிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி.

    ReplyDelete
  2. @நித்திலம்-சிப்பிக்குள் முத்து....

    ஆண்டவன் அருளினால் உங்களுக்கு சீக்கிரமே
    நவதிருப்பதி தரிசனம் கிடைக்க வாழ்த்துக்கள்.
    வருகைக்கு மிக்க நன்றி பவள சங்கரி.

    ReplyDelete
  3. நவதிருப்பதி திருத்தலங்களை ஒரே பதிவாக தரிசனம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி,நன்றிங்க....சீக்கிரமே அந்த பாக்கியத்தை அருள இறைவனருள் வேண்டுகிறேன்...

    ReplyDelete
  4. அருமையான யோசனை. இப்படித் தொகுப்பாகத் தந்திருப்பது செல்ல விரும்பும் பலருக்கும் பயனாகும்.

    ReplyDelete
  5. சமீபத்தில் நான் ஒன்பது கோவில்களையும் தரிசித்தேன். உங்கள் வலைப்பூவின் மூலம் மீண்டும் ஒரு முறை! நேரமிருந்தால் என் வலைப்பூப் பக்கம் வரவும்! நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  6. @S.Menaga....

    உங்களுக்கு நவதிருப்பதி தரிசன பாக்கியம் விரைவிலேயே கிட்டும் மேனகா. வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. @ராமலக்ஷ்மி....

    நன்றிகள் பல ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  8. @Madhavan Srinivasagopalan....

    மிக்க நன்றி மன்னை மைந்தரே.

    ReplyDelete
  9. @ஸ்ரீ..

    தங்கள் வரவிற்கு மிக்க நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  10. Iraivanin thirunamangal thaam evvalavu arumai!!

    Pakirvukku mikka nanRi!

    ReplyDelete
  11. மனம் நிறையும் வண்ணம் மிக விரிவாக திருத்தலங்களைப் பற்றிய பயனுள்ள பகிர்வு. தங்கள் பணி மேன் மேலும் சிறப்பாய் தொடர,சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Very nice compilation Bhuvana. Appreciate the efforts you put to collect the details, visit the temples and write in this beautiful way. Best wishes to continue this graceful work always dear. Very nice post totally.

    ReplyDelete
  13. ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன். very super..

    ReplyDelete
  14. @middleclassmadhavi....

    நீங்கள் சொல்வது சரிதான் மாதவி.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  15. @Kalidoss Murugaiya....

    தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  16. @Vikis Kitchen...

    உங்களது ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு
    பிரத்யேக நன்றி விக்கி.

    ReplyDelete
  17. @VijiParthiban....

    பாராட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி விஜி.

    ReplyDelete
  18. கூடல் அழகர் நவக்கிரகங்களை தரிசித்திருக்கிறேன்.
    மற்ற புதிய தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  19. @சிவகுமாரன்....

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. நவதிருப்பதி தர்சனம் உங்கள் இப்பதிவின் மூலம் கிடைத்து மகிழ்ந்தோம்.

    ReplyDelete
  21. @மாதேவி...

    மிகுந்த மகிழ்ச்சி மாதேவி.

    ReplyDelete
  22. சற்று தாமதமாகத்தான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். காலையிலேயே ஒரு அமைதியை மனதுக்குள் நுழைத்து விட்டீர்கள் சகோதரி.

    ReplyDelete
  23. @மோகன்ஜி...

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
    மோகன்ஜி.

    ReplyDelete
  24. நவ திருப்பதி தரிசித்திருக்கிறேன் என்றாலும் இன்று தங்கள் பதிவு மூலம் மீண்டும் நேரில் தரிசித்த உணர்வு ஏற்பட்டது நன்றி சகோதரி.

    ReplyDelete
  25. புவனா அக்கா நீங்கள் எப்பொழுது ஒரு புது படைப்பு தருவீர்கள் ........... நலமா அக்கா...

    ReplyDelete
  26. நலமா?

    ஆவலுடன்....

    ReplyDelete
  27. இந்த பதிவிற்கான உங்கள் உழைப்பை எண்ணி வியக்கிறேன்....

    இவ்வளவு கோவில்களுக்கும் நேரிலேயே சென்று தரிசித்த உணர்வு தந்து விட்டீர்கள்....

    மிக்க நன்றி புவனா....

    ReplyDelete
  28. @indhira....

    தங்களது வருகைக்கும் மேலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இந்திரா.

    ReplyDelete
  29. @VijiParthiban.....

    தங்களது அன்பான நலம் விசாரிப்புக்கு மிக்க நன்றி விஜி. விரைவில் புதிய படைப்பு தர முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  30. @மாதேவி....

    நலமாக உள்ளேன் சகோதரி. தங்களது அன்பிற்கு
    மிக்க நன்றி.

    ReplyDelete
  31. @R.Gopi....

    தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோபி சார்.

    ReplyDelete
  32. நலமாக உள்ளேன் அக்கா...

    ReplyDelete
  33. @VijiParthiban....

    மிக்க மகிழ்ச்சி சகோதரி விஜி.

    ReplyDelete
  34. Amazing information and excellent presentation.

    ReplyDelete
  35. தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ரகுநாதன்.

    ReplyDelete
  36. ஒரு வருசத்துக்கு மேலே ஆயிடுச்சே எழுதி?
    நலமா?

    ReplyDelete
  37. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  38. very nice post. very useful information. you have complied and published navathirupathi temples all in one place. it was just amazing. great effort. even the locality you have specifed, it will be very useful for pilgrims to visit this holy temples.

    ReplyDelete
  39. ரொம்ப அருமையாச் சொல்லி இருக்கீங்க புவனேஸ்வரி.

    ஒரு அஞ்சு வருசம் நானும் போய்வந்து 3 பதிவுகள் எழுதினேன். உங்களைப்போல் ரத்தினச் சுருக்கமாச் சொல்ல எப்போ கத்துக்கப்போறேனோ?

    நேரம் கிடைக்கும்போது இங்கே பார்த்துட்டுச் சொல்லுங்க. ஜஸ்ட் வெரிஃபை பண்ணிக்கத்தான்:-)

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/04/2009-14.html

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/04/2009-16.html

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/04/2009-17.html

    ReplyDelete
  40. @ Gayathri Sathyanarayanan .....

    தங்களது வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி காயத்ரி.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. @ துளசி கோபால்.....

    வருகை தந்து தங்களது கனிவான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி துளசி அம்மா. தங்களது நவதிருப்பதி பதிவுகளை படித்து ரசித்தேன்.
    உங்களது இயல்பான எழுத்துநடை பாணி அருமை. ஒரு முழுமையான
    பயணக் கட்டுரை. வாழ்த்துக்கள்.


    ReplyDelete