ஜவ்வரிசி : 100 கிராம்
அச்சு வெல்லம் : 6 அச்சு
பால் : 2 குழி கரண்டி
தேங்காய் : அரைமூடி
முந்திரிபருப்பு : 7
காய்ந்த திராட்சை : 10
ஏலக்காய் : 3
நெய் : 2 தேக்கரண்டி
செய்முறை:
கடையில் இரண்டு விதமான ஜவ்வரிசி கிடைக்கிறது. ஒன்று, நன்கு வெள்ளைவெளேர் என உள்ளது. மற்றொன்று சற்று மங்கலான வெளிர் சாம்பல் நிறத்தில் கிடைக்கிறது. வெள்ளையாக உள்ள ஜவ்வரிசி சீக்கிரத்தில் வெந்து கூழ் போல ஆகிவிடும். சாம்பல் நிறத்தில் கிடைக்கும் ஜவ்வரிசிதான் இதுபோல பொங்கல், பாயசம் செய்வதற்கு ஏற்ற ஜவ்வரிசி. வெந்த பிறகு ஜவ்வரிசியின் ருசியும், அதன் கூடவே பளிங்கு போன்ற அதன் தோற்றமும் இந்த வகை ஜவ்வரிசியில்தான் கிடைக்கும். ஜவ்வரிசி வற்றல் போட வேண்டுமானால் வெள்ளை நிற ஜவ்வரிசி வாங்கிச் செய்யலாம்.
முதலில் சொன்னது போல், சாம்பல் நிற ஜவ்வரிசியினை இரண்டு மணிநேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பின், குக்கரில் ஜவ்வரிசி மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து, மூன்று விசில் வந்ததும், குறைந்த தணலில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.
வெல்லத்தை பாகு காய்த்து வடி கட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நெய்யில் காய்ந்த திராட்சை, முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வடி கட்டிய வெல்லப் பாகு கொதி வந்ததும், பால் ஊற்றி அதுவும் சேர்ந்து கொதித்ததும், குக்கரில் வெந்த ஜவ்வரிசியினை சேர்த்து கலக்கவும். இந்தக் கலவை நன்றாக சேர்ந்து வரும்போது, கொஞ்சம் நெய் ஊற்றிக் கிளறவும். பல் பல்லாக நறுக்கிய தேங்காய், நெய்யில் வறுத்த முந்திரிபருப்பு, திராட்சை, ஏலக்காய் கலந்து நன்றாகக் கிளறி இறக்கினால் ஜவ்வரிசி பொங்கல் தயார்.
இந்த ஜவ்வரிசி பொங்கலை சுடச் சுடச் சாப்பிட்டால் மட்டுமே சுவையாக இருக்கும். ஆறி விட்டால் இதன் ருசி அந்தளவிற்கு சுவை படாது. இதனாலேயே அளவில் கொஞ்சமாக செய்து கொண்டு செய்த உடனேயே உண்டு மகிழ்வது நன்று.
*******
குறிஞ்சியின் பொங்கல் ஃபீஸ்ட் ஈவென்ட்டிற்கு இதை அனுப்புகிறேன்.
*******
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ரமேஷ். தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் அருமையான புதுமையான பொங்கல். இவன்ட்ற்கு அனுப்பியதற்கு நன்றி.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Kurinji kathambam
குறிஞ்சி குடில்
நாளைக்கு நம்ம ஊட்டுலே ஸ்பெஷல் டிஷ் இதுதான்..
ReplyDeleteசாப்டா இருக்குமா ?
(முண்டம்.. சாப்பிட்டா எப்படி இருக்கும்.. தீர்ந்துடாது..?,
நான்சொன்னது சாப்ட்.. அதாங்க.. soft )
@Kurinji,
ReplyDeleteநன்றி குறிஞ்சி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அருமையான பொங்கல்.
ReplyDelete@Madhavan Srinivasagopalan,
ReplyDeleteநல்லா இருக்கும், ஆனா சுடச்சுட சாப்டுடனும், ஆறினா நல்லாயிருக்காது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Kanchana Radhakrishnan,
ReplyDeleteநன்றி காஞ்சனா. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிப்பான குறிப்புக்கு நன்றி! ஜவ்வரிசி+வெல்லம் காம்பினேஷனில் செய்ததில்லை. அவசியம் செய்து ‘சூடா’ சாப்பிடறோம்:)!
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துக்கள் புவனேஸ்வரி!!
நன்றி மேடம். சூடா சாப்பிட்டா செம காம்பினேஷன், சாப்டுட்டு சொல்லுங்க. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteRomba nalla irukku...puthiya recipe...naanum seithu parkkirein..
ReplyDeleteReva
பொங்கலுக்கு ஏற்ற நல்ல ரெசிபி. ஆமாம்? டாக்டர் பட்டம் வாங்கினால் அதனை போட்டுக்கொள்ள வேண்டாமோ?
ReplyDeleteநம் பதிவுலக நண்பர்,நண்பிகள் எல்லாம் விளாசி எடுத்து விட்டார்கள் . அந்த பதிவின் பின்னூட்டம் படித்தீர்களா?
இனிய் பொங்கல் வாழ்துக்கள் . ஜவ்வரிசி (வெள்ளை) வீட்டில் இருக்கிறது. நீங்க சொன்னது போல் அது கரைந்து தான் போகுது:) இனிமெல் கவனமா பார்த்து வாங்குவேன். தகவலுக்கு நன்றி. புதுமையான பொங்கல் இனிப்பு. super. பார்த்தாலே சாப்பிட தோணுதே.
ReplyDeleteJawarisi payasam looks very mouthwatering.Happy Pongal.
ReplyDeletesuper pongal.
ReplyDeleteHappy Pongal.
new recipe..... Thank you!
ReplyDeleteஇந்த காம்பினேஷன் வித்தியாசமா நல்லாயிருக்கு,இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேடம்...
ReplyDeleteபுவனா அருமை,நான் முதன் முதலாக பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் பண்ணும் பொழுது அது பொங்கல் போல் ஆகிவிட்டது,ஆனால் டேஸ்ட் அருமையாக இருந்தது.இப்ப இந்த ஜவ்வரிசி பொங்கல் பார்க்கும் பொழுது அந்த நினைவு வந்து விட்டது.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....
ReplyDeleteபுதுமையான ஜவ்வரிசி பொங்கல் .... நல்லயிருக்குங்க
ReplyDeleteஉங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
Very interesting pongal..
ReplyDeleteநானும் பிளான் பன்ணி இருந்தேன் வித்தியாசமாக ஜவ்வரிசியில் செய்யலாம் என்று நீங்களும் போட்டு இருக்கீன்க்க்
ReplyDelete@Reva,
ReplyDeleteசெய்து பாத்துட்டு சொல்லுங்க ரேவதி. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@கக்கு - மாணிக்கம்,
ReplyDeleteநன்றி மாணிக்கம். டாக்டர் பதிவு பின்னூட்டம் அனைத்தையும் படித்தேன் :)
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Viki's Kitchen,
ReplyDeleteநீங்களும் ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க விக்கி. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Pushpa,
ReplyDeleteநன்றி புஷ்பா. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@vanathy,
ReplyDeleteநன்றி வானதி. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Chitra,
ReplyDeleteநன்றி சித்ரா. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@S.Menaga,
ReplyDeleteநன்றி மேனகா. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Philosophy Prabhakaran,
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பிரபாகரன்.
@asiya omar,
ReplyDeleteசூப்பர் போங்க. ரொம்ப நன்றி ஆசியாம்மா.
@GEETHA ACHAL,
ReplyDeleteதங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@சி. கருணாகரசு,
ReplyDeleteமிக்க நன்றி கருணாகரசு. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Gayathri's Cook Spot,
ReplyDeleteநன்றி காயத்ரி. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Jaleela Kamal,
ReplyDelete//நானும் பிளான் பன்ணி இருந்தேன் வித்தியாசமாக ஜவ்வரிசியில் செய்யலாம் என்று நீங்களும் போட்டு இருக்கீன்க்க் //
சூப்பர்.. உங்க ஜவ்வரிசி பொங்கலுக்காக வெய்ட்டிங். நன்றி ஜலீலாம்மா.
ஜவ்வரிசியில் பொங்கல் ..பலே..டிரை பண்ணிடுவோம்.இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDelete@ஸாதிகா,
ReplyDeleteட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி சகோதரி.
ஜவ்வரிசி பொங்கல் செயதுப் பார்க்கிறேன் புவனா.
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள் புவனா.
செய்துபாத்துட்டு சொல்லுங்க கோமதியம்மா. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதுமையான பொங்கல்!!
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துகள் புவனா!!!
மிக்க நன்றி மகா. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜவ்வரிசி பொங்கல் நல்லா இருக்கு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete@கோவை2தில்லி,
ReplyDeleteரொம்ப நன்றிங்க. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுவனா மேடம்...
ReplyDeleteஜவ்வரிசி பொங்கலா? சூப்பர்... புது காம்பினேஷன்..
நான் கூட ஜவ்வரிசில வச்சா, அது வடாம் மாவு மாதிரி ஆயிடுமோன்னு நெனச்சேன்...
//குறிஞ்சியின் பொங்கல் ஃபீஸ்ட் ஈவென்ட்டிற்கு இதை அனுப்புகிறேன்.//
அனுப்புங்கோ... வாழ்த்துக்கள்...
வலைத்தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
புவனா
ReplyDeleteநான் இன்று பார்லி பொங்கல் செய்துட்டேம் பா.போட்டோ எடுக்க முடியாம போச்சு.
இன்னொருமுறை ஜவ்வர்ரிசியில் செய்து போடுகீறென்
@Vijisveg Kitchen,
ReplyDeleteமிக்க நன்றி. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@R.Gopi,
ReplyDelete//நான் கூட ஜவ்வரிசில வச்சா, அது வடாம் மாவு மாதிரி ஆயிடுமோன்னு நெனச்சேன்...//
நானும் அப்படித்தான் நெனச்சேன், ஆனா நல்லா வந்துடுச்சு. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Jaleela Kamal,
ReplyDeleteபார்லியிலும் பொங்கலா.. கலக்குறீங்க. உங்க ஜவ்வரிசி பொங்கலுக்காக வெய்ட்டிங்.
பொங்கலோ பொங்கல். பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேடம்
ReplyDeleteபுதுமையான, இனிமையான பொங்கல்! புகைப்படமும் அழகு!
ReplyDelete@Gopi Ramamoorthy,
ReplyDeleteநன்றி கோபி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@மனோ சாமிநாதன்,
ReplyDeleteமிக்க நன்றி மனோம்மா. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நேற்று ஜவ்வரிசி பொங்கலை செய்தேன்...
ReplyDeleteரொம்ப அருமையா வந்துச்சுங்க
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோஷம் ஆமினா. மிக்க நன்றி.
ReplyDeleteஜவ்வரிசி பொங்கல் புதுசா இருக்குதுங்க!! பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி தெய்வசுகந்தி.
ReplyDeleteDEAR THANK U FOR COMMENT IM REALLY HAPPY AGAIN THANK A LOT BY MOHANRAJ www.mohanblueginge@yahoo.com live in kuwait
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி மோகன்ராஜ். தங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDelete