Saturday, January 14, 2012

ரவா பொங்கல்

தேவையான பொருட்கள்:
ரவா : 1/4 படி
அச்சு வெல்லம் : 12
நெய் : 5 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு : 12
காய்ந்த திராட்சை : 12
ஏலக்காய் பொடி : 1 தேக்கரண்டி
ஃபுட் கலர் (மஞ்சள்) : ஒரு சிட்டிகை

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும்.

வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும். இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும். ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவா பொங்கல் தயார்.


தேவையான பொருட்கள்:
ரவா : 1/4 படி
பெருங்காயப்பொடி : 1 சிட்டிகை
மிளகு : 1 தேக்கரண்டி
சீரகம் : 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் : 1
கருவேப்பிலை : சிறிதளவு
இஞ்சி : சிறிதளவு
நெய் : 3 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு : 10
உப்பு : தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்தவுடன், அதில் பெருங்காயப்பொடி தேவையான அளவு உப்பு பொட்டுக் கொள்ளவும். இதில் நன்கு வறுத்த 1/4 படி ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். கொதி வந்ததும் இளந்தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.

இன்னொரு வாணலியில் நெய் ஊற்றி அதில் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி போன்றவற்றை வாசம் வரும் வரை தாளித்து பொங்கலில் கலந்து இறக்கினால் ரவா பொங்கல் (காரம்) தயார்.


*******

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

40 comments:

  1. இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    குறிப்புகளுக்கு நன்றி புவனேஸ்வரி.

    ReplyDelete
  2. அருமையான இரண்டு பொங்கலுடன் பொங்கல் வாழ்த்துக்கள்!
    நன்றி புவனேஸ்வரி.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. ரவாப் பொங்கலில் இனிப்பு, காரம் இரண்டும் சுவைத்தோம். அருமையாக இருந்தது.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பொங்கல் super பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. பொங்கல் வாழ்த்துக்கள்.


    அதுசரி.....கேட்டால் அடிக்க வர மாட்டீர்களே?!
    ரவா கேசரி - சர்க்கரை பொங்கல்
    ரவா உப்புமா- வெண்பொங்கல்- அதாவது [காரம் ]
    சரிதானா??
    நான் அபீட்...

    ReplyDelete
  6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இரண்டு ரவா பொங்கலும் மிக அருமை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பொங்கல் மாதிரி டேஸ்ட் இருக்குமா உப்புமா மாதிரியா?

    ReplyDelete
  9. நானும் செஞ்சு பாத்துடறேன். photo super!

    ReplyDelete
  10. இன்றைக்கு ரவாப் பொங்கல் செய்தேன். நல்ல டேஸ்ட் என்றாலும் உப்புமா ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. முந்திரிப்பருப்பு காலி, போடவில்லை.- ஒரு வேளை அதான் காரணமோ?

    ReplyDelete
  11. @ ராமலக்ஷ்மி.....
    மிக்க நன்றி ராமலக்ஷ்மி வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  12. @கோமதி அரசு...

    வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
    கோமதியம்மா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. @கோவை2தில்லி.....

    ரசித்து சுவைத்தமைக்கு மிக்க நன்றிங்க.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. @Kanchana Radhakrishnan....

    மிக்க நன்றி காஞ்சனா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. @கக்கு - மாணிக்கம்.....

    நீங்க அப்பீட்டே ஆகா வேண்டாம் மாணிக்கம் சார்.
    அரிசிக்கு பதிலா ரவா. நீங்கள் சொல்வது சரிதான்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  16. @சிநேகிதி...

    மிக்க நன்றி சிநேகிதி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. @Jaleela Kamal....

    மிக்க நன்றி ஜலீலாம்மா. உங்களுக்கும் புத்தாண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. @ அப்பாதுரை....

    அப்பாதுரை சார் இந்த விஷயத்திற்காக இவ்வளவு சிரத்தை எடுத்து செய்து பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகிட்டதுக்கு மிக்க நன்றி. ரவா உப்புமா சற்று பொலபொலன்னு செய்யனும்.
    எந்த பொங்கலா இருந்தாலும் கொஞ்சம் குழைய செய்தால்தான் பொங்கல் ருசி வரும். பொங்கலுக்கு முந்திரி கூடுதல் ருசிதான். மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  19. ரவாவில் அருமையாக இரு வகை பொங்கலை சுலபமாக செய்து காட்டி விட்டீர்கள்!

    ReplyDelete
  20. @ ஸாதிகா.....

    வருகை தந்தமைக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  21. இந்த பகிர்வு என் கண்ணில் படலை.உங்கலை காணோமேன்னு நினைத்ததுண்டு.அருமையான் பொங்கல்ஸ்.வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  22. வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி
    ஆசியாம்மா.

    ReplyDelete
  23. புவனா டியர் எப்படி இருக்கீங்க? புது வருட வாழ்த்துக்கள். பொங்கல் நல்ல சிறப்பா இருந்திருக்குமினு நினைக்கிறேன். படமே சொல்லுதே:) ரவா பொங்கல் ரொம்ப புதுமை. இனிப்பு ரவா பொங்கல் நிச்சயமா கேசரிக்கு போட்டி தான். வெல்லம் சேர்த்து செய்தது அருமை. கார பொங்கல் நல்ல இருக்கு.

    ReplyDelete
  24. நல்லா இருக்கேன் விக்கி டியர். எங்கேயோ இருந்து கொண்டு என் மேல் நீங்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. கோப்பெருஞ்சோழன்
    பிசிராந்தையார் என இருவரது நட்புதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
    மிக்க நன்றி விக்கி டியர்.

    ReplyDelete
  25. இன்னும் ஜாஸ்தி தண்ணியடிச்சிருக்கணுங்கறீங்க.. ரவாவுல.. ரைட்டு. அடுத்த வாட்டி குழையடிச்சுற மாட்டேன்?

    ReplyDelete
  26. உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில்....

    http://kovai2delhi.blogspot.in/2012/02/blog-post.html

    ReplyDelete
  27. எனக்குப் பிடித்த தளமாக உங்கள் வலைப்பூவுக்கு 'லீப்ஸ்டர்' விருதை அறிவித்து மகிழ்கிறேன். சுட்டி இதோ: http://middleclassmadhavi.blogspot.in/2012/02/blog-post.html

    ReplyDelete
  28. எப்படியோ எங்கேயோ க்ளிக் பண்ணி 2010 டிசம்பரில் நீங்க எழுதின "நீயாய் இரு" கதையை படிக்க கிடைச்சுது.. அது இந்த ரவா பொங்கலை விடவும் வெகு அருமை.

    ReplyDelete
  29. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள். நன்றி.

    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

    ReplyDelete
  30. @கோவை2தில்லி...

    எனக்கு விருது வழங்கி கௌரவித்தமைக்கு மிக்க நன்றி ஆதி வெங்கட்.

    ReplyDelete
  31. @middleclassmadhavi..

    எனக்கு விருது தந்து பெருமை படுத்தியமைக்கு
    மிக்க நன்றி.

    ReplyDelete
  32. @Porkodi (பொற்கொடி)..

    தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி பொற்கொடி.

    ReplyDelete
  33. @ஸாதிகா..

    என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
    வைத்தமைக்கு மிக்க நன்றி ஸாதிகாம்மா.

    ReplyDelete
  34. @கீதமஞ்சரி..

    என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
    வைத்தமைக்கு மிக்க நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
  35. நீண்ட நாட்களுக்கு பின் இங்கு வர முடிந்தது. எப்படி இருக்கிங்க. ரவா பொங்கள் சூப்பர்.

    ReplyDelete
  36. நான் நலமாக உள்ளேன். உங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி விஜி.

    ReplyDelete
  37. என்ன இதற்கு பிறகு எந்த சமையல் குறீப்பும் காணும்

    ReplyDelete
  38. ஸ்பெஷாலா ஏதாவது செய்து போஸ்ட் பண்ணுஙக்

    ReplyDelete
  39. @Jaleela Kamal....

    கண்டிப்பாக செய்கிறேன் ஜலீலா.
    தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete